புதன், 16 செப்டம்பர், 2009

திரு. மதன் அவர்களின் வந்தார்கள்... வென்றார்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

நபி (ஸல்)பற்றி நல்லறிஞர்களின் கருத்துக்கள்:

நபி (ஸல்)பற்றி நல்லறிஞர்களின் கருத்துக்கள்:
1. உயர்ந்த குறிக்கோள், குறைவான சிறிய அளவிளான வசதிவாய்ப்புக்கள், பிரமிக்க வைக்கும் பலன்கள் ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்?
புகழ்மிக்க மனிதர்களெல்லாம் மதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாதாயக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.
ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரச வம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டுமே கொள்ளவில்லை. அன்றைய உலகின் மூன்றிலொரு நிலபரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை ஈர்த்தார்கள். வழிபாட்டுத்தலங்களையும் சமய நெறிகளையும் பல்வேறு கருத்துக்களையும்,கொள்கைகளையும், நம்பிக்கைகளையும்,ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.
வெற்றியின்போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர்நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப்பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவேயில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்திவந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடிக் குணம் உடையவர் என்றோ பறைசாற்றிடவில்லை. மாறாக சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.
இந்த சமயக்கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று இறைவனின் ஒருமை; மற்றொன்று இறைவனுக்கு வடிவம் கிடையாது என்பதுமாகும். முந்தியது இறைவன் என்றால் என்னவென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது; மற்றொன்று பிரச்சார துணையில் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்டநிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுபூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கியளித்த மாமேதை ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
LAMARTIN> HISTORIE DE LA TURQUIE PARIS 1854.VOL 2.P 276-77
2. அவர் ஒரே நேரத்தில் சீசரும் போப்பும் ஆவார். ஆனால் அவர் போப்பின் பகட்டுகள், ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுக்காப்புப்படைகள்,எதுமில்லாத சீசர் ஆவார்.
தயார் நிலையிலுள்ள ராணுவமோ, நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் (மக்களின் உள்ளங்களையும் பெரும் நிலப்பரப்பையும்) வெறும் இறைவனின் இசைவாணையை, தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாகக் கொண்டு ஆட்சி புரிந்தாகக் கூறிக்கொள்ளும் உரிமை, மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால் அவர் முஹம்மத்(ஸல்) அவர்களேயாவர்; ஏனெனில் ஆட்சியதிகாரம் செலுத்திடத் தேவையான கருவிகள், துணைச்சாதனங்கள் எதுவுமில்லாமலேயே (ஆன்மீக மற்றும் உலக) அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்.
BOSWORTH SMITH> MOHAMMED AND MOHAMMADANISM.
3. உலகின் மிகச் செல்வாக்கு வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவராக முஹம்மத் (ஸல்) அவர்களை நான் தேர்ந்தெடுப்பது வாசகர்கள் சிலருக்கு வியப்பை அளிக்கலாம். சிலர் இதனை கேள்விக்குரியதாகவும் கருதலாம். ஆனால் முஹம்மத்(ஸல்) அவர்கள் தான் உலக வரலாற்றிலேயே சமயத்துறை, உலகியற் துறை இரண்டிலும் மிகவும் வெற்றிகரமானவராகத் திகழ்ந்த மாமனிதர் ஆவார்.
MICHEL H.HART>THE 100: A RANKING OF MOST INFLUENTIAL PERSONS IN HISTORY> NEW YORK: HART PUBLISHING COMPANY> INC. 1978> P.33.
4. முஹம்மத்(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்ரவதைகளையும்,கொடுமைகளையும் சகித்துக்கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவைனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையை நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத்(ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும், மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்சனைகளையும் கேள்விகளையும்தான் எழுப்புகிறதே தவிர பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதாயில்லை. மேலும், உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களுள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.
W.MONTGOMERY> MOHAMMED AT MECCA> OXFORD 1932>P.52
5. தமக்கு முன்னால் வாழ்ந்த பெரும் இறைதூதர்கள் அனைவரையும் போலவே முஹம்மத்(ஸல்) அவர்களும் தமது இயலாமையை உணர்ந்து, இறைச்செய்தியை ஏந்திச்சென்று மக்களிடையே எடுத்துரைப்பவராகப் பணியாற்றிட முதலில் தயங்கவே செய்தார். ஆனால் வானவர், ஓதுவீராக! என்று கட்டளையிட்டார். நாம் அறிந்த வரை முஹம்மத்(ஸல்) அவர்கள் எழுதவோ, படிக்கவோ இயலாதவராகவேயிருந்தார். பூமியின் ஒரு பெரும் பகுதியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பேரண்டத்தின் இறைவன் ஒருவனே! என்கிற சொற்களை அவர் அப்படியே எடுத்துக் கூறலானார்.
எல்லா விசயங்களிலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மிகவும் செயல்பூர்வமானவர்களாய் நடைமுறைப்படுத்திட உகந்த முறைகளில் செயல்படக் கூடியவர்களாய்த் திகழ்ந்தார்கள். அவர்களின் அன்பு மகனார் இப்றாஹீம் மரணமடைந்தபொழுது கிரகணம் ஒன்று நிகழ்ந்தது. உடனே இப்றாஹீமின் மரணத்திற்காக இறைவனே தனிப்பட்டமுறையில் துக்கம் தெரிவிக்கிறான் என்னும் வதந்திகள் எழுந்தன. ஆனால் முஹம்மத்(ஸல்) அவர்களோ, கிரகணம் பிடிப்பது ஓர் இயற்கை நிகழ்வாகும். இத்தகைய விசயங்களை ஒரு மனிதரின் மரணத்துடனோ பிறப்புடனோ தொடர்புப்படுத்திப் பார்ப்பது மூட நம்பிக்கையாகும் என்று அறிவித்தார்.
முஹம்மத்(ஸல்) அவர்களின் மரணத்தின் போது கூட அவரைக் கடவுளாக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவருக்குப்பின் அவரது நிர்வாக வாரிஸாக வரவிருந்த அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் சமயவரலாற்றிலேயே தலைசிறந்த சொற்பொழிவு ஒன்றின் வாயிலாக இந்த மனவியாதியை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டார்.
அந்த சொற்பொழிவின் முக்கிய பகுதி: உங்களில் எவரேனும் இதுவரை முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருப்பாயின் அவர்கள் முஹம்மத்(ஸல்) இறந்துவிட்டார்கள் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்; நீங்கள் இறைவனைத்தான் வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவன் என்றும் வாழ்பவன்; நிலைத்தவன் என்பதை அழுத்தமாக அறிந்துக்கொள்ளுங்கள்.
JAMES A MICHENER ISLAM: THE MISUNDERSTOOD RELIGION’ IN THE READER’S DIGEST(AMERICAN EDITION)IN MAY> 1955>PP.68.70.
6. அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல. மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரியதொன்றாகும் மக்கா நகரிலும், மதீனா நகரிலும் அவர் வடிவளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல்,மாற்றப்படாமல்,திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றுக்குப் பின்னரும் இன்றுவரை இந்திய, ஆப்பிரிக்க, துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து, கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும்விட்டார்கள்.
நான் ஒரே இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார்கள்’ என்பதுதான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரே விதமான பறைசாற்றலாகும். ஒருபுறம், கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்கு குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்ததை தாண்டி (கடவுள் என்கிற அளவிற்கு) உயர்த்தப்பட்டதில்லை. அவர் அளித்துவிட்டுச்சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைகளுக்குள் கட்டுபடுத்தி(மிகைப்படுத்த விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.
EDWARD GIBBON AND SIMON OCKLAY> HISTORY OF THE SARACEN EMPIRE>LON>DON> 1870.P.54.
7. மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்டபோது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்பதை முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன்.
நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக கருதி நடந்து கொள்ளும் உயர்பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக்காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்; இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.
YOUNG INDIA> QUOTED IN THE LIGHT> LAHORE> FOR 16TH SEPTEMBER 1924>
MAHATMA GANDHI.
8. அனைத்துலக சகோதரத்துவம், மனித இன சமத்துவம் முஹம்மத்(ஸல்) அவர்கள் பறைசாற்றிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் சமூக முன்னேற்றத்திற்கு மாபெரும் தேவைகளை ஆற்றியிருப்பதை எடுத்துரைக்கின்றன. பெரும் சமயநெறிகள் அனைத்தும் இதே கொள்கையை போதித்திருக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் தூதர் இந்தக் கொள்கையை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார் அதன் மதிப்பு முழுமையாக உணரப்பட வேண்டும். அதன் சாதனை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். உலக மக்களின் மனசாட்சி விழித்தெழுந்துவிட்டால் இனமாச்சரியங்கள் மறைந்துவிடும்; மனித இன சகோதரத்துவக் கொள்கை நடைமுறைக்கு வந்துவிடும்.
PROF. RAMAKRISHNA RAO> MOHAMMAD THE PROPHET OF ISLAM>PAGE 7.
9. அரேபியாவின் இந்தத் தூதருடைய வாழ்க்கையும், ஒழுக்கப்பண்புகளையும் தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத்தூதர்களில் ஒருவரான இறுதித்தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விசயங்களையே சொல்கிறேன் என்றாலும், நானேஅவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதையும் உணர்வும் ஏற்படுவதை நான் உணர்கிறேன்.
ANNIE BESANT> THE LIFE AND TEACHINGS OF MUHAMMED 1932>P.4.

புதன், 26 ஆகஸ்ட், 2009

நோன்பின் அருட்கொடை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நோன்பின் அருட்கொடை


மூலம் : அஹ்மது ஷாக்கிர்
தமிழில் : நெல்லி. அஹு நர்கீஸ்

நோன்பின் மாதமாகிய ரமலான் கணக்கிட இயலா எண்ணற்ற அருட்கொடைகள் நிரம்பியதாய் உள்ளது.அதன் முக்கியத்துவம் புரிந்தவர்கள் வருடம் முழுவதும் ரமலான் மாதமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவர்.முழு நம்பிக்கையுடனும்,எதிர்பார்ப்புகளுடனும் நோன்பு நோற்கும் முஸ்லீம்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருள்களை பொழிகிறான்.
ரமலானில் நோற்கப்படும் நோன்பின் பயன்கள் வகைப்படுத்தப்பட்டு அதன் பயன்கள் மட்டும் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.தக்வா: இது கீழ்காண்பவற்றை உள்ளடக்கியது.
* எந்நிலையிலும் இறைவனுக்கு பயப்படல்.
* இறைவனால் அருளப்பட்டதை நடைமுறைப்படுத்தல்.
* உலகில் தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்டதை ஏற்று நன்றி செலுத்தல்.
* மறுமை வாழ்வுக்கு தயார்படுத்தி கொள்ளல்.
* சுய கட்டுப்பாடு.

* சுய பரிசோதனை.
* இச்சைகளை கட்டுப்படுத்தல்.
மேற் காண்பவற்றை ஏற்று நடைமுறைப்படுத்தும் போது,தன் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் தக்வாவை கொண்டு வர முடியும்.

2.பாதுகாப்பு:
• ஒழுக்கக்கேடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.
• உணர்வுகளை கட்டுப்படுத்தல்.
• தேவையற்ற,வீணான விஷயங்களை விட்டு ஒதுங்கியிருத்தல்.
• அனைத்து வித மக்ரூஹ்/ஹராமான விஷயங்களை விட்டு விலகி இருத்தல்.
மேற்கண்டவைகளை வாழ்வில் கடைபிடிக்கும் போது நோன்பு அவனின் தீய செயல்களிலிருந்து சமுதாயத்துக்கு பாதுகாப்பு அளித்து அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது.

3.குர்ஆன் அருளப்படல்:
குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது.குர்ஆனாகிறது;
* மனித குலத்திற்கு ஓர் வழிகாட்டி.
* நன்மை,தீமை பிரித்தறிவிக்கக் கூடியது.
* முந்தைய வேதங்களின் உண்மை கருத்துக்களின் தொகுப்பும்
பாதுகாக்கப்பட்டதுமாகும்.
* முஃமின்களுக்கு ஓர் நற்செய்தி.
* நேர்வழி காட்டக் கூடியது.
* இறைவனின் பெருங்கொடை.
* நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம்.
4.சுவனத்து வாயில்கள் திறந்து வைக்கப்படுகின்றன.
5.நரக வாயில்கள் மூடி வைக்கப்படுகின்றன.
6.ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.
7.நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடனும் நோன்பு வைத்தவர்களின் பாவங்கள்
அல்லாஹ்வால் மன்னிக்கப்படுகின்றன.
8.ரய்யான் எனும் வாயில்:
நோன்பு நோற்றவர்கள் மட்டுமே சுவனத்தின் ரய்யான் எனும் வாயிலின்
உள்ளே நுழைய முடியும்.
9.இரு வகை மகிழ்ச்சி:
நோன்பாளிகள் இரண்டு தடவை மகிழ்ச்சி அடைகிறார்கள்.அவை;
நோன்பு திறக்கும் போது.
அல்லாஹ்வை சந்திக்கும் போது.
10.வாய் நாற்றம்:
இறுதி தீர்ப்பு நாளில் அல்லாஹ்விடத்தில் நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசனை (நாற்றம்) கஸ்தூரியின் மணத்தை விட பிரியமானதாய் இருக்கும்.
11.ரமலான்-ரமலான்:
யார் இரண்டாண்டுகள் தொடர்ந்து தூய்மையான எண்ணத்துடன் நோன்பு நோற்கிறாரோ இரண்டு நோன்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிக்கிறான்.
12.நன்மைகள் பன்மடங்காக்கப்படல்:
ரமலானில் புரியும் நற்செயல்களுக்கு 10,70,700 மடங்கு மற்றும் அதற்க்கு மேலான நன்மைகள் கிடைக்கின்றன.
13.பிறருக்கு உணவளித்தல்:
நோன்பாளிகள் நோன்பு திறக்க தேவையான ஏற்பாடுகள் செய்பவர்களுக்கும்,ரமலானில் கடைசி பத்து நாட்களில் தேவையுடையோர்க்கும் வறியவருக்கும் உணவளிப்பவர்க்கு அல்லாஹ் நோன்பாளிகளுக்கு கொடுக்கும் நன்மைகளை போன்று கொடுக்கிறான்.
14.நோன்பாளிகள் நன்மையில் நிலைத்திருப்பர்:
நோன்பு திறப்பதை விரைவாக செய்யும் வரை.
ஸஹ்ரை தாமதப்படுத்தும் வரை.
15.ஸஹ்ரில் விளையும் நன்மை:
ஸஹ்ர் உணவில் பரக்கத்.
இரவு நேர தொழுகை.
குர்ஆன் ஓதுதல்.
பஜ்ர் ஜமாஅத்துடன் தொழல்.
16.தராவீஹ் தொழுகை:
யார் பயபக்தியுடனும் தூய்மையான உள்ளத்துடனும் தராவீஹ் தொழுகையை
(இரவு நேர தொழுகை) நிறைவேற்றுகிறாரோ அவரின் முந்தைய பாவங்கள்
மன்னிக்கப்படும்.
17.பரிந்துரை:
நோன்பாளிக்கு இவற்றின் பரிந்துரை கிடைக்கும்.
நோன்பு
குர்ஆன்
18.இஃதிகாப்:
கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வழங்குகிறான்.
19.லைலத்துல் கத்ர்:
இந்த இரவில் பயபக்தியுடன் இறைவனை வணங்குபவர்களுக்கு கிடைப்பவை
• பாவங்கள் மன்னிக்கப்படல்.
• ஆயிரம் மாதங்களை விட சிறந்தது.
• இறைவனை நினைவு கூறல்.
• திருமறையை ஓதுதல்.
• மறுமையில் தரஜாக்கள் உயர்த்தப்படல்.
20.ஸதக்கத்துல் பித்ர்:
ஏழை எளியோருக்கு வழங்கப்படும் ஸதக்கத்துல் பித்ரின் மூலம் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.
உளத் தூய்மை.
தேவையுடையோர்க்கு உதவுதல்.
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளல்.
மனித உறவுகளை வலுப்படுத்தல்.
சமூகத்தை மேம்படுத்தல்.
21.ஜகாத்:
ஜகாத்தின் தன்மைகளில் சில
தூய்மை.
செல்வத்தில் பரக்கத்.
பொருளாதார மேம்பாடு.
செல்வம் பங்கிடப்படல்.
வறுமை ஒழிப்பு.
22.ஈதுல் பித்ர்:
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மற்றும் சகோதரத்துவத்தை வலுவாக்கி கொள்ள ஒரு வாய்ப்பு.
23.துஆ ஏற்கப்படல்:
நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படுகிறது.
24.உம்ரா:
ரமலானில் உம்ரா செய்வது பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு ஒப்பானது.
25.சில சரித்திர வெற்றிகள்:
ரமலானில் நிறைய வெற்றிகளை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தந்துள்ளான்.
பத்ர் போர்.
அகழ் போர்.
மக்கா வெற்றி.
தபூக் போர்.
ஐரோப்பாவில் தாரிக் பின் ஜியாத் ஆட்சியை பிடித்தல்.
ஜெருசலத்தை கிறிஸ்தவர்களிடமிருந்து ஸலாவுத்தீன் அய்யூபி மீட்டல்.

ஸ்வைன் ஃப்ளு (பன்றி காய்ச்சல்) - சில குறிப்புக்கள்

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?
ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.

மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.

கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?

ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
• உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
• நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
• முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
• ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).
• வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
• தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.
• நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.
• உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
• மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
• மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும்.
• இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்
• தொடர்ந்த தலை வலி
• குளிருதல், நடுங்குதல்
• இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
• பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
• தலை சுற்றல் / மயக்கம்
• பசியின்மை
• உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
• இடைவிடாத காய்ச்சல்
• வயிற்று போக்கு
• வாந்தி எடுத்தல்
• மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்
• உயிரிழப்பும் ஏற்படலாம்
குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?
• தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
• மூச்சு விட சிரமப் படுவார்கள்
• உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்
• தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்
• அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்
• தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்
• தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்
இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.

வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.
========================================================
இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன?
-----------------------------------------------------------------------
Chennai
King Institute of Preventive Medicine (24/7 Service)
Guindy, Chennai – 32
(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital
Thondiarpet, Chennai
(044) 25912686/87/88, 9444459543

Government General Hospital
Opp. Central Railway Station, Chennai – 03
(044) 25305000, 25305723, 25305721, 25330300
------------------------------------------------------------------------
Pune
Naidu Hospital
Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01
(020) 26058243

National Institute of Virology
20A Ambedkar Road, Pune – 11
(020) 26006290
------------------------------------------------------------------------
Kolkata
ID Hospital
57,Beliaghata, Beliaghata Road, Kolkata - 10‎
(033) 23701252
------------------------------------------------------------------------
Coimbatore
Government General Hospital
Near Railway Station,
Trichy Road, Coimbatore – 18
(0422) 2301393, 2301394, 2301395, 2301396
------------------------------------------------------------------------
Hyderabad
Govt. General and Chest Diseases Hospital,
Erragadda, Hyderabad
(040) 23814939
------------------------------------------------------------------------
Mumbai
Kasturba Gandhi Hospital
Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai - 11
(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital
J J Marg, Byculla, Mumbai - 08
(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute
Acharya Donde Marg, Parel, Mumbai – 12
(022) 24160947, 24160961, 24160962
------------------------------------------------------------------------
Kerala
Government Medical College
Gandhi Nagar P O, Kottayam - 08
(0481) 2597311,2597312

Government Medical College
Vandanam P O, Allapuzha - 05
(0477) 2282015

Taluk Hospital
Railway Station Road, Alwaye, Ernakulam
(0484) 2624040 Sathyajit - 09847840051

Taluk Hospital
Perumbavoor PO, Ernakulam 542
(0484) 2523138 Vipin - 09447305200
------------------------------------------------------------------------
Gurgaon & Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)
Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29
(011) 26594404, 26861698
Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases
22, Sham Nath Marg,
New Delhi – 54
(011) 23971272/060/344/524/449/326

Dr. Ram Manohar Lohia Hospital
Kharak Singh Marg,
New Delhi – 01
(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute
University Enclave, New Delhi- 07
(011) 27667102, 27667441, 27667667, 27666182
------------------------------------------------------------------------
Bangalore
Victoria Hospital
K R Market, Kalasipalayam, Bangalore – 02
(080) 26703294
Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases
Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29
(080) 26631923
Dr. Shivaraj - 99801-48780
------------------------------------------------------------------------

நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.
===========================================================
Source:http://vidhoosh.blogspot.com ஹெல்த் மினிஸ்ட்ரி ஒரு புதிய வெப் சைட் திறந்துள்ளது.

கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!

--------------------------------------------------------
ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009




ஷர்ராஜ்